17 March 2010

கொங்கணாபுரம் அருகே சாலையை சீர் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கொங்கணாபுரம் மார்ச் 17: கொங்கணாபுரம் அருகே உள்ள கொங்கணாபுரம் கச்சராயன்குட்டை பகுதியில் கோவையிலிருந்து பூனாவிற்கு மின்மோட்டார்களை ஏற்றிய லாரி நேற்று சென்றது. அப்போது அங்குள்ள வளைவில் திரும்பும்பொது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைஓரம் கவிழ்ந்தது. லாரியில் வந்த தம்பம்பட்டியை சேர்த்த ஓட்டுனர் கனகராஜ் (30), கிளீனர் மணி (28), மற்றொரு ஓட்டுனர் தர்மபுரியை சேர்ந்த ஜெகன்நாதன் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர் அவர்கள் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் சாலையை சீரமைக்க வேண்டியும் அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்க்கு தாசில்தார் சண்முகம், துணை தாசில்தார் தவசியன், இடைப்பாடி காவல் உதவிகள் ஆய்வாளர் சிவசங்கரன், வளர்மதி ஆகியோர் சம்பவம் இடம் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் அச்சாலையில் வேகதடை அமைக்க உறுதி கூரியதின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நன்றி - தினகரன்

2 comments:

ramesh said...

கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சராயன் குட்டையில் பெண்களை காட்டி லாரியை நிருத்துகிறார்கள். டிரைவர் உடல் உறவுக்காக கீழே இறங்கி அவள் கேக்கும் பணத்தைக் கொடுத்து உல்லாசமாக இருக்கிறார்கள்.

Unknown said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Shankar

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

HeadLines

Recent Posts Widget | Webaholic